மலைகளும், மலை சார்ந்த இடங்களும் கொண்ட பழங்குடியினரின் வசிப்பிடம் நீலகிரி. நீலகிரி மலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த குறியீடு(labyrinth symbol), உலகம் முழுக்கவும் இருக்கின்ற பல தொன்மையான வரலாற்றுக்கு முந்தைய நாகரீகங்களிலும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது எத்தியோபியாவில் ஆட்சி செய்த பேரரசி ஷோபாவைப் பற்றிய குறிப்புகளிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கி. பி. 10 ஆம் நூற்றாண்டிலிருந்து இப்பகுதிகளை கங்கர்கள், கடம்பர்கள், ஹொரளர்கள், நாயக்கர்கள், மைசூர் அரசர்கள், கேரளவர்மா முதலியோர் இப்பகுதிகளை ஆண்டதற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.ஹொரள மன்னன் தன்னாயகா நீலகிரி கொண்டான் என்ற சிறப்புப் பெயரோடு ஆண்டதாக கூறப்படுகிறது.பதினோராம் மற்றும் பன்னிரண்டாம் நூற்றாண்டில் சிலப்பதிகாரத்தில் நீலகிரியை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் அதாவது சேரர், சோழர்கள், பாண்டியர்கள், ராஷ்டிரகூடர், கங்கர்கள், பல்லவர்கள், கடம்பர்கள் காலத்தில் நீலகிரிக்கு ராஜாக்கள் வந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. விஷ்ணுவர்தனா காலத்தில் (கி.பி. 1111-1141) ராஜாக்கள் ‘நிலா மலைகள்’ என அழைத்துள்ளனர். 1336 முதல் 1565 வரை விஜயநகர பேரரசின் ஒரு பகுதியாக நீலகிரி இருந்துள்ளது. 1565 இல் அதன் வீழ்ச்சிக்கு பின்னர் மைசூர் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்கு நீலகிரி சென்றது. பின்னர் அது ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் (1760 முதல் 1799) ஆட்சியின் கீழ் வந்தது. ஒரு ஒப்பந்தம் மூலம் 1799ல் கிழக்கு இந்திய வணிகக் குழுவிற்கு விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த அழகான மலைப்பகுதி 1818 வரை ஆங்கிலேயரால் அறியப்படாமல் இருந்துள்ளது. இதன்பிறகு கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜான் சல்லிவன், நீலகிரியை உலகுக்கே அறிமுகம் செய்து வைக்க காரணமானார். 1819 ஆம் ஆண்டு கோவை ஆட்சியராக இருந்த ஜான் சல்லிவன் கோத்தகிரி வழியாக நீலகிரிக்கு வந்தார். தற்போதைய கன்னேரிமுக்கு பகுதியில் இவரது இல்லம் நினைவு சின்னமாக மாற்றப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் இப்பகுதிகளை ஆளத் தொடங்கிய பின்னரே பல நகரங்களும் வசதிகளும் பெருக ஆரம்பித்தன. ஆங்கிலேய கவர்னர் 1829 இல் உதகைக்கு விஜயம் செய்தார். அவர் வருகைக்கு முன்பே சல்லிவன் என்பவர் முயற்சியில் கூடலூர் பகுதி வளர்ச்சியடைந்திருந்தது. 1830இல் ஜேம்ஸ் தாமஸ் கோவை மாவட்ட ஆட்சியராக இருந்தபொழுது, நீலகிரி மாவட்ட மலைகளில் பெரும்பகுதி, கோத்தகிரியை தவிர்த்து, மலபாரில் இணைக்கப்பட்டன. 1831-32இல் அவலாஞ்சி, சிஸ்பாரா, குந்தா, பகுதிகளில் சாலைகள் கேப்டன் முர்ரே என்பவரின் தலைமையில் போடப்பட்டன. 1832ல் சர்ச் மிஷனரி ஒன்றை தோற்றுவித்து ஆங்கிலேயப் பள்ளி ஒன்றும் கட்டப்பட்டது. 1868 ஆம் ஆண்டுச் சட்டம், நீலகிரி மாவட்டத்திற்கு தனி மாவட்ட ஆட்சியரை நியமிக்கும் அதிகாரத்தை வழங்கியது.1893இல் ஆக்டர்லோனி பள்ளத்தாக்கும்,
1877இல் வயநாடு பகுதியில் தென்கிழக்குப் பகுதியிலும் நீலகிரி மாவட்டத்துடன் இணைந்தன.
நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம் ஆண்டு அப்போதைய கோயம்புத்தூர் மாவட்ட அட்சியர் ஜான் சுல்லிவன் அவர்களின் உதவியாளர்கள் திரு விஸ் மற்றும் கிண்டர்ஸ்லி ஆகியோர் ரங்கசாமி சிகரத்தில் உள்ள கோத்தகிரி என்னும் இடத்தை கண்டறிந்தனர். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் ஜான் சுல்லிவன் அவர்கள் இந்த இடத்தின் மீது மிகுந்த ஆர்வமாக இருந்தார். 1819 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதியன்று அவர் தனது குடியிருப்புகளை அங்கு நிறுவியதோடு, வருவாய் சபைக்கும் அறிக்கை செய்தார்.
‘நீலகிரி’ என்பது நீல மலை ஆகும் (நீல – நீலம் மற்றும் கிரி – மலை) இந்த பெயரைப் பற்றி முதல் குறிப்பு சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது. மலைப்பகுதிகளை சூழ்ந்து கொண்டிருக்கும் ‘குறிஞ்சி’ பூவின் ஊதா பூக்கள் மலரும் காலப்பகுதியில், மலைகளின் அடிவாரத்தில் வாழும் மக்கள், நீலகிரி என்ற பெயரைக் கொடுத்திருக்க வேண்டும்.
1789 ஆம் ஆண்டு நீலகிரி பிரிட்டிஷ் அரசிடம் கொடுக்கப்பட்டவுடன், நீலகிரி கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக மாறியது. 1868 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீலகிரி கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. ஜேம்ஸ் வில்கின்சன் பிரிக்ஸ் நீலகிரியின் ஆணையராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவர் 1882 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நீலகிரி மாவட்டத்தை அமைத்தார் பின் ஆணையர் இடத்தில் ஒரு ஆட்சியர் நியமிக்கப்பட்டார். 1882 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி, ரிச்சர்ட் வெலெஸ்லி பார்லோ நீலகிரி மாவட்டத்தின் முதல் ஆட்சியர் ஆனார்.
மாவட்டத்தின் புவியியல் இடம்
நீலகிரி ஆனது MSL க்கு 900 முதல் 2636 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. அதன் அட்சரேகை மற்றும் நீள அளவுகள் 185 கி.மீ. (அட்சரேகை: 76.0 E முதல் 77.15 E வரை) 130 கி.மீ (அட்சரேகை: 10 – 38 WP 11-49N). நீலகிரி மாவட்டம் ஆனது வடக்கே கர்நாடகா மாநிலமும், கிழக்கே கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டமும், தெற்கே கோயம்புத்தூர் மாவட்டம் மற்றும் கேரளா மாநிலமும், மேற்கே கேரளா மாநிலமும் எல்லைகளாக கொண்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நிலப்பகுதி ஆனது உருளும் மற்றும் செங்குத்தானது. 60% பயிரிடக்கூடிய நிலப்பகுதியில் 16% முதல் 35% வரை சரிவுகளில் உள்ளது.
மாவட்ட நிர்வாகம்
நீலகிரி மாவட்டத்தில் 3 வருவாய் கோட்டங்கள், 6 வருவாய் வட்டங்கள், 4 ஊராட்சி ஒன்றியங்கள், 88 வருவாய் கிராமங்கள், 15 வருவாய் ஃபிர்காக்கள், 35 ஊராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகள் உள்ளன.
No comments:
Post a Comment